பிசாசை எதிர்கொள்ளுங்கள்: லியோ படத்தின் அனல் பறக்கும் இந்தி போஸ்டரை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!
அமைதியாக இருங்கள் மற்றும் பிசாசை எதிர்கொள்ளுங்கள் என்ற அதிரடி வாசகத்துடன் லியோ படத்தின் இந்தி போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். வட இந்திய திரையுலக சந்தையிலும் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பை இந்த அதிரடி போஸ்டர் எகிற வைத்துள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் வட மாநிலங்களிலும் லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் பனி சூழலில் விஜய் கொடுக்கும் தீவிர தோற்றம் பாலிவுட் ரசிகர்களையும் சினிமா பிரியர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால் வட இந்திய பாக்ஸ் ஆபிஸிலும் படம் புதிய சாதனைகளை படைக்கும் என வர்த்தக வட்டாரங்கள் கணிக்கின்றன. பான் இந்தியா அளவில் அக்டோபர் 19 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ள லியோ படத்திற்கு அனைத்து மொழிகளிலும் வணிக ரீதியான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
· Dir_lokesh