ஆக்ஷன் அதிரடியில் லியோ: அக்டோபர் 19 ரிலீஸை உறுதிசெய்த லோகேஷ் கனகராஜின் புதிய போஸ்டர்!
லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாவதை உறுதிப்படுத்தும் வகையில் 'லாக்டு அண்ட் லோடட்' போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். தீவிரமான தோற்றத்தில் சுத்தியலுடன் விஜய் காட்சியளிக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம் ரிலீஸுக்கு முழுமையாக தயாராகிவிட்ட நிலையில், உலகளாவிய முன்பதிவு மற்றும் திரையரங்கு ஒப்பந்தங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கி வரலாறு காணாத புதிய வசூல் சாதனைகளை இப்போதே படைத்து வருகிறது. பனிமலை பின்னணியில் ரத்தமும் ஆக்ஷனும் கலந்த இந்த புதிய தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளதுடன், ரிலீஸ் நாளுக்கான கவுண்ட்டவுனையும் தீவிரப்படுத்தியுள்ளது. இன்னும் சில தினங்களில் லியோ திரையரங்குகளில் மிகப்பெரிய வசூல் புயலை கிளப்ப முழுமையாக தயாராகிவிட்டது.
· Dir_lokesh