இன்னும் 2 மணி நேரத்தில் லியோ படத்தின் ரடடா பாடல் ரிலீஸ்: இரவு 9:30 மணிக்கு வெளியிடுகிறது சோனி மியூசிக்!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படத்தின் விறுவிறுப்பான பின்னணிப் பாடலான 'ரடடா' இன்று இரவு 9:30 மணிக்கு வெளியாகும் என சோனி மியூசிக் சவுத் அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் இப்பாடல் அனைத்து ஆடியோ தளங்களிலும் வெளியிடப்படும் என கவுண்ட்டவுன் போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் அனிருத்தின் அனல் பறக்கும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ஒலிக்கும் 'ரடடா' தீம் மியூசிக் ரசிகர்களின் தீவிர வரவேற்பைப் பெற்றிருந்தது. திரையரங்குகளில் படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த ட்ராக்கை தனியாக வெளியிடுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று இரவு இப்பாடல் வெளியாகவுள்ளது விஜய் ரசிகர்களுக்கு உற்சாக விருந்தாக அமைந்துள்ளது.
· Sony Music South