இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் லியோ பேடாஸ் கிளிம்ப்ஸ்: சோனி மியூசிக் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'பேடாஸ்' பாடலின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சோனி மியூசிக் சவுத் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'பேடாஸ் டே' கொண்டாட்டமாக இந்த வீடியோ வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடலைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான 'பேடாஸ்' மீதான எதிர்பார்ப்பு வானளவிற்கு உயர்ந்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள இந்த கிளிம்ப்ஸைக் காண விஜய் ரசிகர்கள் யூடியூப் தளத்தில் இப்போதே காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் 19 ரிலீஸுக்கு தயாராகும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு எகிற வைத்துள்ளது.
· Sony Music South