லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'பேடாஸ்': இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு என அனிருத் அறிவிப்பு!

லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'பேடாஸ்': இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு என அனிருத் அறிவிப்பு!

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இரண்டாவது தனிப்பாடலான 'பேடாஸ்' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வெளியான 'நா ரெடி' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்ததாக வெளியாகும் இந்த பேடாஸ் பாடல் முழு ஆக்‌ஷன் எனர்ஜியுடன் அனிருத்தின் அதிரடி இசையில் அமைந்துள்ளது. சோனி மியூசிக் நிறுவனத்தின் மூலம் இப்பாடல் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாக உள்ளது. அக்டோபர் 19 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் லியோ திரைப்படத்தின் இந்த புதிய பாடல் இணையத்தில் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Anirudhofficial

பழைய செய்திகள்