இன்று மாலை 6 மணிக்கு லியோ இரண்டாவது பாடல் 'பேடாஸ்': லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மணிக்கு லியோ இரண்டாவது பாடல் 'பேடாஸ்': லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிவிப்பு!

லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'பேடாஸ்' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். மிஸ்டர் லியோ தாஸ் கதாபாத்திரத்தின் அதிரடி உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்த மாஸ் பாடல் அமைந்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடல் அதிரடி பின்னணி இசை மற்றும் வேகமான மாஸ் வரிகளுடன் உருவாகியுள்ளது. விஜய்யின் லியோ தாஸ் கதாபாத்திரத்திற்குரிய மாஸ் எனர்ஜியை வெளிப்படுத்தும் இந்த பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நா ரெடி பாடலை விடவும் விறுவிறுப்பாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் இந்த இரண்டாவது பாடல் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19 ரிலீஸுக்கு முன்னதாக இந்த பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

· Dir_lokesh

பழைய செய்திகள்