லியோ படத்தின் மூன்றாவது பாடல் அன்பெனும் நாளை ரிலீஸ்: விஜய், த்ரிஷாவின் மெலடி மேஜிக்!

லியோ படத்தின் மூன்றாவது பாடல் அன்பெனும் நாளை ரிலீஸ்: விஜய், த்ரிஷாவின் மெலடி மேஜிக்!

தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள 'லியோ' திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'அன்பெனும்' நாளை வெளியிடப்படும் என சோனி மியூசிக் சவுத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்பின் தூய்மையை விவரிக்கும் மெலடி பாடலாக இது அமையவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான 'நா ரெடி' மற்றும் 'பேடாஸ்' ஆகிய அதிரடிப் பாடல்கள் இணையத்தை அதிர வைத்த நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா இணையும் குடும்பப் பாசமும் காதலும் நிறைந்த இனிமையான மெலடியாக இப்பாடல் உருவாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள லியோ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் வேளையில், இந்த மெலடி பாடல் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டை அலங்கரிக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

· Sony Music South

பழைய செய்திகள்