லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் 'அவராச்சன் அண்ட் சன்ஸ்': அக்டோபர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
மலையாள திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் தனது மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள புதிய நகைச்சுவை குடும்பத் திரைப்படம் 'அவராச்சன் அண்ட் சன்ஸ்'. தம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜோசப் விஜீஷ் மற்றும் இயக்குநர் தம்பி இணைந்து எழுதியுள்ள இப்படத்தின் திரைக்கதை முழுநீள நகைச்சுவை கலந்த குடும்ப பாச பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்கி வரும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு மகிழ்ச்சியான படைப்பாக இது அமையும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாத தொடக்க விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியாகும் இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளிவர உள்ளன.
· Propratheesh