லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் 'மிஸ்டர் பாரத்': டிசம்பர் 11 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்!

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் 'மிஸ்டர் பாரத்': டிசம்பர் 11 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்!

முழுக்க முழுக்க நகைச்சுவையும் அதிரடியான பொழுதுபோக்கும் நிறைந்த 'மிஸ்டர் பாரத்' (Mr Bhaarath) திரைப்படம் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏபி இன்டர்நேஷனல் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் (G Squad), பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன. பாலா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல முன்னணி நகைச்சுவை நடிகர்கள் இதில் களம் இறங்கியுள்ளதால் திரையரங்குகளில் சிரிப்பு வெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களையும் குடும்பங்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. டிசம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

· Apifilms

பழைய செய்திகள்