தென்னிந்திய திரைக்கதை எழுத்தாளர்களுக்கான 'ஸ்வான் அகாடமி' தொடக்கம்: லோகேஷ் கனகராஜ் லோகோவை வெளியிட்டார்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) மற்றும் ஐபி கிளைம்ப் இணைந்து இளம் திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்துடன் 'ஸ்வான் அகாடமி' என்ற புதிய அமைப்பை சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு அகாடமியின் புதிய லோகோ மற்றும் பயிற்சி பாடத்திட்டத்தை முறைப்படி வெளியிட்டார். இயக்குநர் சேரன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் லீனா மணிமேகலை உள்ளிட்ட பல முன்னணி படைப்பாளிகள் இதில் கலந்துகொண்டு திரைக்கதை மற்றும் படைப்புரிமை குறித்து உரையாற்றினர். திரைத்துறையில் கதை ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், புதிய எழுத்தாளர்களுக்கு தரமான பயிற்சிகளை வழங்கவும் இந்த முயற்சி மிகச் சிறந்த அடித்தளமாக அமையும் என்று திரையுலகினர் வாழ்த்தியுள்ளனர்.
· Nikil Murukan