லோகேஷ் கனகராஜ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய படத்திற்கு 'RX' எனத் தலைப்பு: ரெஜினா கசாண்ட்ராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

லோகேஷ் கனகராஜ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய படத்திற்கு 'RX' எனத் தலைப்பு: ரெஜினா கசாண்ட்ராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் நிறுவனமும் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'RX' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா அழுத்தமான தோற்றத்தில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு ஆஷாமீரா ஐயப்பன் வசனங்களை எழுதியுள்ளார். ரெஜினா கசாண்ட்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ரமேஷ் திலக், நாசர், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். உண்மை எப்போதும் குரல் கொடுப்பதைக் கோருகிறது என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக டீசர் மற்றும் திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· @xpresscinema

பழைய செய்திகள்