சாண்டியின் ‘3:33’ படக்குழுவுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உற்சாக வாழ்த்து

சாண்டியின் ‘3:33’ படக்குழுவுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உற்சாக வாழ்த்து

நடன இயக்குநர் சாண்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘3:33’ திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் சிறப்புப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திகில் படம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து நிறுத்தும் என்று லோகேஷ் கனகராஜ் மனதாரப் பாராட்டியுள்ளார். பாம்பூ ட்ரீஸ் தயாரிப்பில் நம்பிக்கை சந்துரு இயக்கியுள்ள இப்படத்தில் சாண்டியின் நடிப்பு ரசிகர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைத் தரும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “டிக் டாக், டிக் டாக்... உங்கள் நேரம் இப்போது தொடங்குகிறது” எனத் தனது பதிவில் குறிப்பிட்ட லோகேஷ், ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். முன்னணி இயக்குநரின் இந்த பாராட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

· Iamsandy_off

பழைய செய்திகள்