ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமம்: கைப்பற்றியது லைகா நிறுவனம்!

ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமம்: கைப்பற்றியது லைகா நிறுவனம்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பெருமையுடன் அறிவித்துள்ளது. ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் கதாநாயகர்களாக இணைந்து நடித்துள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் புனையப்பட்டுள்ளது. பாகுபலி படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த படைப்பாக வெளிவரவுள்ளதால் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

· Lyca Productions

பழைய செய்திகள்