சிக்மா ப்ரீ-லாஞ்ச் விழாவில் மாஸாக என்ட்ரி கொடுத்த தயாரிப்பாளர் சுபாஸ்கரன்: உற்சாக வரவேற்பு!

சிக்மா ப்ரீ-லாஞ்ச் விழாவில் மாஸாக என்ட்ரி கொடுத்த தயாரிப்பாளர் சுபாஸ்கரன்: உற்சாக வரவேற்பு!

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 'சிக்மா' திரைப்படத்தின் பிரம்மாண்ட ப்ரீ-லாஞ்ச் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் முன்னணி தொழிலதிபருமான திரு. சுபாஸ்கரன் மாஸான என்ட்ரி கொடுத்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தரமான திரைப்படங்களை வழங்கி வரும் லைகா நிறுவனம், சிக்மா படத்தை மிகப்பெரிய அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளது. விழாவில் இசையமைப்பாளர் தமன், சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழா சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதுடன், படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான கவுண்ட்டவுனையும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளது. தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் வருகை விழாவுக்கு மேலும் கம்பீரத்தை சேர்த்தது.

· Idiamondbabu

பழைய செய்திகள்