நிதினின் அதிரடி நடனத்துடன் வெளியாகும் மாச்சர்ல நியோஜகவர்கம் முதல் பாடல் சில் மாரோ

நிதினின் அதிரடி நடனத்துடன் வெளியாகும் மாச்சர்ல நியோஜகவர்கம் முதல் பாடல் சில் மாரோ

நிதின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாச்சர்ல நியோஜகவர்கம்' திரைப்படத்தின் முதல் பாடலான 'சில் மாரோ' இன்று இரவு 9 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சித்தார்த் ரெட்டியாக நிதினின் கலக்கலான ஸ்டைல் மற்றும் துள்ளலான நடனத்துடன் இப்பாடல் வெளியாகவுள்ளதாக ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு மகதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ளார். நகாஷ் அஜிஸ் மற்றும் சஞ்சனா கல்மன்ஜே இணைந்து பாடியுள்ள இந்த உற்சாகப் பாடலுக்கு கிருஷ்ண சைத்தன்யா வரிகள் எழுதியுள்ளார். ஆதித்யா மியூசிக் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகிறது. கீர்த்தி ஷெட்டி மற்றும் கேத்ரின் தெரசா கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் மீது இசைப் பிரியர்களுக்கு தனி ஆர்வம் எழுந்துள்ளது. ஆக்ஷன் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு வெளியான உடனேயே, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு இந்த பாடல் மிகச் சிறந்த தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Sreshthmovies

பழைய செய்திகள்