SSMB29 படத்தில் மகேஷ் பாபுவின் தந்தையாக மாதவன்: விக்ரம் மறுத்ததால் அடித்த வாய்ப்பு!

SSMB29 படத்தில் மகேஷ் பாபுவின் தந்தையாக மாதவன்: விக்ரம் மறுத்ததால் அடித்த வாய்ப்பு!

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் பிரம்மாண்ட படைப்பான 'SSMB29' திரைப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மகேஷ் பாபுவின் தந்தை வேடத்தில் மாதவன் தோன்றவுள்ளதாக எக்ஸ் தளத்தில் சினிமா வட்டாரங்கள் பகிர்ந்துள்ளன. தொடக்கத்தில் இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சியான் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், பிற படங்களின் படப்பிடிப்பு காரணங்களால் அவர் இதில் நடிக்க இயலாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கதையைக் கேட்ட மாதவன், கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகப் பேசப்படுகிறது. காடுகளின் பின்னணியில் உலகளாவிய சாகசத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் மகேஷ் பாபு மற்றும் மாதவன் இருவரும் நேருக்கு நேர் இணையும் காட்சிகள் ரசிகர்களுக்கு புதுவித விருந்தாக அமையும் என டோலிவுட் திரையுலகம் மிகுந்த ஆவலுடன் காண்கிறது.

· @_movietamil

பழைய செய்திகள்