மாதவன், சரண் கூட்டணியின் ரொமான்டிக் ஹிட் 'ஜே ஜே': வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவு!

மாதவன், சரண் கூட்டணியின் ரொமான்டிக் ஹிட் 'ஜே ஜே': வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவு!

இயக்குனர் சரண் இயக்கத்தில் சாக்லேட் பாய் மாதவன், பூஜா உமாசங்கர் மற்றும் நிஷா கோத்தாரி நடிப்பில் வெளியாகி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட 'ஜே ஜே' திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் மாதவன் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 2003 ஆம் ஆண்டு தீபாவளி விருந்தாக நவம்பர் 14 அன்று வெளியான இப்படம், இரண்டு பேர் தங்கள் விதியை ரூபாய் நோட்டில் போன் நம்பர் எழுதி சோதிக்கும் புதிய விதமான காதல் கதைகளத்தை கொண்டிருந்தது. கொல்கத்தா மற்றும் சென்னை பின்னணியில் படமாக்கப்பட்ட இப்படத்தில் மாதவனின் ஸ்டைலான நடிப்பும் அறிமுக நாயகி பூஜாவின் துறுதுறுப்பான அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. பரத்வாஜ் இசையமைப்பில் வெளியான 'மே மாசம் 98-ல்', 'உனக்கென பிறந்தேனே' உள்ளிட்ட அனைத்து பாடல்களும் இன்றளவும் பலரது பிளேலிஸ்ட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும் எவர்கிரீன் ஹிட்களாகும். காதல் திரைப்படங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த 'ஜே ஜே' படத்தின் 23 ஆம் ஆண்டு நினைவுகளை ரசிகர்கள் மலரும் நினைவுகளாக பகிர்ந்து வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்