மதுமிதா இயக்கத்தில் வெளியாகும் 'ஜான் டோ': நவம்பர் 13 ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள மர்மம் நிறைந்த புலனாய்வுத் திரைப்படமான ஜான் டோ வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது என நடிகர் கயல் தேவராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். நான்கு நாட்களில் சந்துரு துப்பறியும் மர்மங்கள் என்ன என்பதைச் சுற்றியுள்ள சுவாரசியமான கேள்விகளோடு புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து இயக்கும் மதுமிதா, இப்படத்தை விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாக்கியுள்ளார். கதாநாயகன் சந்துரு மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் விதமும், ஒவ்வொரு திருப்பத்திலும் பார்வையாளர்களின் புதிரை அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையும் இப்படத்தின் தனித்துவமான பலமாக அமையவுள்ளது. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை ஒரு புலனாய்வுப் படத்திற்கான த்ரில்லிங் உணர்வை முழுமையாகத் தரும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் 13ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகும் ஜான் டோ திரைப்படம், தீவிரமான த்ரில்லர் படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj