பிரசாந்த் வர்மாவின் 'மகாகாளி': பக்தி பரவசமூட்டும் 'ஐகிரி நந்தினி' பாடல் வெளியீடு!

பிரசாந்த் வர்மாவின் 'மகாகாளி': பக்தி பரவசமூட்டும் 'ஐகிரி நந்தினி' பாடல் வெளியீடு!

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் பிரம்மாண்ட சினிமா யுனிவர்ஸில் உருவாகும் 'மகாகாளி' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஐகிரி நந்தினி' தற்போது யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. பக்தி பரவசமும் அசாத்திய வீரமும் நிறைந்த சக்திவாய்ந்த ஆன்மீக கீதமாக இந்த பாடல் மிக கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்கேடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் தொடக்கம் முதலே அகில இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஹனு-மான்' திரைப்படத்தின் அதிரடி வசூல் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் வர்மா வழங்கும் படம் என்பதால், ஆன்மீகமும் பிரம்மாண்ட காட்சிகளும் கலந்த ஒரு அபார திரையரங்க அனுபவமாக இப்படம் அமையும் என சினிமா ஆர்வலர்கள் நம்புகின்றனர். இத்திரைப்படம் வரும் 2027 சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 8 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்