பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் 'மகாகாளி': இயக்குநர் பூஜா கொல்லுருவின் பிறந்தநாளைக் கொண்டாடிய படக்குழு!
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'மகாகாளி' திரைப்படத்தின் இயக்குநர் பூஜா கொல்லுருவிற்கு படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பான நாளில், இயக்குநரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டமாகப் பிரதிபலிக்கும் என்று படக்குழு தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஆர்.கே.டி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் அக்ஷய் கண்ணா, ஸ்ரேயா ரெட்டி, குஷ்பு சுந்தர், பூமி ஷெட்டி, ரோஹித் சரஃப், நாசர், முரளி சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். இந்திய புராணக் கதையம்சத்தையும் நவீன சினிமா தொழில்நுட்பத்தையும் இணைத்து பிரம்மாண்ட உலகத்தை உருவாக்கும் முயற்சியில் இயக்குநர் பூஜா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மகாகாளி' திரைப்படம் 2027-ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 8-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. புராண ஆக்ஷன் திரைப்படப் பிரியர்களுக்கு இது மிகச் சிறந்த விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
· Actor Kayal Devaraj