பிறந்தநாள் வாழ்த்துகளுடன் மகாகாளி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

பிறந்தநாள் வாழ்த்துகளுடன் மகாகாளி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான குஷ்பு சுந்தரின் பிறந்தநாளையொட்டி, அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மகாகாளி' திரைப்படக் குழுவினர் தங்களது அன்பான வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். இதோடு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் கீழ் பூஜா கொல்லூரு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அக்ஷய் கண்ணா, ஸ்ரியா ரெட்டி, ரோஹித் சரஃப், முரளி சர்மா, நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். குஷ்புவின் திரைப்பயணத்தில் இது மிகவும் சவாலான மற்றும் கம்பீரமான கதாபாத்திரமாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆர்.கே.டி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், வரும் 2027 ஜனவரி 8 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் மையக் கதையம்சத்துடன் தயாராகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்