விஜயதசமி சிறப்பு போஸ்டர்: 2027 ஜனவரி 8 அன்று திரைக்கு வரும் 'மகாகாளி' திரைப்படம்!
பக்தி மற்றும் புராண வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான 'மகாகாளி' திரைப்படத்தின் புதிய போஸ்டர் விஜயதசமி திருநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிரபல பிஆர்ஓ வம்சி சேகர் தனது எக்ஸ் தளத்தில் இந்த உற்சாக தகவலையும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் பகிர்ந்துள்ளார். மகிஷாசுர மர்த்தினி திருவுருவத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த மாஸ் போஸ்டர் சமூக வலைதளங்களில் பக்தர்களையும் சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் அம்மனின் ஆக்ரோஷமான அவதாரத்தை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் உயர்தர விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் திரைக்கு வரத் தயாராகிறது. படத்தின் தயாரிப்பு தரம் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டத் தொடக்கமாக திரைக்கு வரும் இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று திரையுலக வட்டாரங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.
· Ursvamsishekar