அக்டோபர் 22 முதல் மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறப்பு: முதல்வர் ஒப்புதல் குறித்து ஜெயந்திலால் கடா நெகிழ்ச்சி!

அக்டோபர் 22 முதல் மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறப்பு: முதல்வர் ஒப்புதல் குறித்து ஜெயந்திலால் கடா நெகிழ்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 22 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பென் ஸ்டுடியோஸ் தலைவர் டாக்டர் ஜெயந்திலால் கடா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட நாட்களாக மகாராஷ்டிராவில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைத்துறை கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இந்த நிலையில் முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அரசுடன் நடத்திய தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு திரையரங்குகளைத் திறக்க அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய சினிமா துறைக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கும் வேளையில், இந்த முடிவு புதிய படங்களின் வெளியீட்டுத் தேதிகளை உறுதிப்படுத்த தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் தந்துள்ளது.

· Jayantilalgada

பழைய செய்திகள்