புதிய தோற்றத்தில் அசத்தும் மகேஷ் பாபு: எஸ்எஸ்எம்பி 28 படப்பிடிப்பு களம் தயார்

புதிய தோற்றத்தில் அசத்தும் மகேஷ் பாபு: எஸ்எஸ்எம்பி 28 படப்பிடிப்பு களம் தயார்

இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் 'எஸ்எஸ்எம்பி 28' திரைப்படத்திற்காக நடிகர் மகேஷ் பாபுவின் புதிய கெட்டப் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் கூடிய இந்த அட்டகாசமான ஸ்டைலிஷ் தோற்றம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அத்தடு மற்றும் கலீஜா ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மகேஷ் பாபு மற்றும் த்ரிவிக்ரம் கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் ஸ்ரீலீலா நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் டீசர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்