மகேஷ் பாபுவின் எஸ்எஸ்எம்பி28 முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு: அன்பறிவ் அமைத்த மாஸ் ஆக்ஷன் காட்சிகள்
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் உருவான பிரம்மாண்ட திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில் உற்சாகமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் முதல் கட்டத்தில் மிகப்பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த அதிரடி சண்டைக் காட்சிகளை சிறப்பாக அமைத்துக் கொடுத்த அன்பறிவ் மாஸ்டர்களுக்கு தயாரிப்பாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மகேஷ் பாபுவின் ஸ்டைலான ஆக்ஷன் அவதாரம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு தசரா பண்டிகைக்குப் பிறகு மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹெக்டே பங்கேற்புடன் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. த்ரிவிக்ரம்-மகேஷ் பாபுவின் இந்த கூட்டணி மீது தொடக்கம் முதலே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
· Anbariv