ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெயின் லடேகா: குத்துச்சண்டை கதைக்கு தயாராகும் ரசிகர்கள்!

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெயின் லடேகா: குத்துச்சண்டை கதைக்கு தயாராகும் ரசிகர்கள்!

குத்துச்சண்டை விளையாட்டை மையமாகக் கொண்டு எதார்த்தமான உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள 'மெயின் லடேகா' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஆகாக்ஷ் பிரதாப் சிங் முதன்மை கதாபாத்திரத்தில் மிகக் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு அசாத்தியமான குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். வறுமை, தனிப்பட்ட இழப்புகள் மற்றும் சமூக சவால்களைத் தாண்டி குத்துச்சண்டை வளையத்தில் ஒரு வீரன் எப்படிப் போராடுகிறான் என்பதை மிக உணர்ச்சிகரமாக திரைக்கதையில் செதுக்கியுள்ளனர். மேலும் இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சம்மேளனம் இந்த திரைப்படத்தின் உண்மைத் தன்மைக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்கி பாராட்டியுள்ளது. விளையாட்டு மற்றும் உண்மைப் போராட்டக் கதைகளை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். திரையரங்குகளில் பாராட்டுகளைப் பெற்ற இந்த படைப்பு, வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்காக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

· Jiohotstar

பழைய செய்திகள்