24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகள்: யூடியூபில் புதிய சாதனை படைத்த மலைக்கோட்டை வாலிபன் டீசர்!
மோகன்லால் நடிப்பில் உருவான 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து மலையாள சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. படத்தின் மக்கள் தொடர்பு பிரதீஷ் சேகர் இந்த மகிழ்ச்சியான தகவலை எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' டீசர் படைத்திருந்த சாதனையை முறியடித்து, மலைக்கோட்டை வாலிபன் 24 மணி நேரத்தில் 9.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. பின்னர் அடுத்த சில மணி நேரங்களிலேயே 10 மில்லியன் பார்வைகளுடன் யூடியூப் ட்ரெண்டிங் வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் தனித்துவமான காட்சி அமைப்பும், மோகன்லாலின் கம்பீரமான குரலும் மல்யுத்தக் களமும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்த இணைய சாதனை படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.
· Propratheesh