சர்வதேச அரங்கில் மலையாள சினிமா சாதனை: டொராண்டோ திரைப்பட விழாவில் அரங்கு நிறைந்த ஹாஃப்

சர்வதேச அரங்கில் மலையாள சினிமா சாதனை: டொராண்டோ திரைப்பட விழாவில் அரங்கு நிறைந்த ஹாஃப்

கனடாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF), மிட்நைட் மேட்னஸ் பிரிவில் தேர்வான முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமையை 'ஹாஃப்' (HALF) திரைப்படம் பெற்றுள்ளது. விழாவில் திரையிடப்பட்ட மூன்று காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் முழுமையாக விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 'ஹாஃப்', அடுத்ததாக ஃபெண்டாஸ்டிக் ஃபெஸ்ட், பியாண்ட் ஃபெஸ்ட் மற்றும் சிட்ஜஸ் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட உள்ளது. உலகளாவிய சினிமா மேடைகளில் மலையாள படைப்புகள் அடுத்தடுத்து அங்கீகாரம் பெற்று வருவது இந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுமையான கதைக்களமும் மிரட்டலான திரைக்கதையும் கொண்ட இப்படம் உலகத் திரைப்பட ஆர்வலர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. திரைப்பட விழாக்களின் பயணத்தை முடித்துக் கொண்டு விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவிக்கவுள்ளனர்.

· Kollywood Ent

பழைய செய்திகள்