கேரளாவில் 5 கோடி வசூலைக் கடந்து அசத்தும் பௌமா: திரையரங்குகளில் நீடிக்கும் நல்ல வரவேற்பு!

கேரளாவில் 5 கோடி வசூலைக் கடந்து அசத்தும் பௌமா: திரையரங்குகளில் நீடிக்கும் நல்ல வரவேற்பு!

மலையாளத்தில் வெளியான மர்ம திரில்லர் திரைப்படமான பௌமா (Bouma), கேரள பாக்ஸ் ஆபிஸில் 5 கோடி ரூபாய் வசூல் அளவைக் கடந்துள்ளது. வார இறுதி நாட்களைத் தாண்டி, வார நாட்களிலும் குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் படம் நிலையான வசூலை ஈட்டி வருவதாக மலையாளம் ரிவ்யூ தளம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. ரெஜின் எஸ். பாபு இயக்கத்தில் திலீஷ் போத்தன், சாகர் சூர்யா, அதிதி பாலன், ரேவதி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், தனது நேர்த்தியான கதைக்களம் மற்றும் உருவாக்கத்திற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. திகிலும் மர்மமும் கலந்த கதையை நம்பகத்தன்மையுடன் திரையில் கொண்டு வந்திருப்பது சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி தியேட்டரில் கல்லா கட்டி வரும் படங்களில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது. இந்த வாரம் நல்ல மலையாள திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்க்க விரும்புவோருக்கு பௌமா ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்று திரை விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

· MalayalamReview

பழைய செய்திகள்