மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப் இணையும் ஹலோ டியர்: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரேமலு திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை மமிதா பைஜூ மற்றும் அமல் டேவிஸ் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற சங்கீத் பிரதாப் இருவரும் புதிய படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். ஹலோ டியர் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் 2027 ஜனவரி 29 அன்று வெளியாகும் என்று ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் தினோய் பவுலோஸ் இயக்குகிறார். மேலும், மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஆஷிக் உஸ்மான் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். பிரேமலு படத்தின் வெற்றிக்குப் பிறகு மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோரின் காம்போ மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க இளமைத் துள்ளலும் காதலும் நிறைந்த ஒரு அழகான பீல் குட் காதல் திரைப்படமாக ஹலோ டியர் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பார்வை மற்றும் பாடல் குறித்த அடுத்தடுத்த சுவாரசியமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
· Apifilms