பேரன்பு படத்திற்குப் பின் தமிழில் நடிக்காதது ஏன்: தனுஷின் ஓம் படம் குறித்து மம்மூட்டி ஓபன் டாக்
ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து நடிகர் மம்மூட்டி மனம் திறந்து பேசியுள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வரும் பேட்டியில், தமிழ் சினிமாவில் தனக்கு நல்ல கதைகள் அமையாதது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். பேரன்பு படத்திற்குப் பிறகு பலரிடம் கேட்டும் நல்ல கதைகளோ வலுவான பாத்திரங்களோ தமக்குக் கிடைக்கவில்லை என்று மம்மூட்டி கூறியுள்ளார். அந்தச் சூழலில்தான் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஓம் கதையுடன் தன்னை அணுகியதாகவும், அப்போது தனது உடல்நிலை சரியில்லாததால் காத்திருக்குமாறு கூறியதை ஏற்று இயக்குனர் பொறுமையாகக் காத்திருந்து படத்தைத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் தளபதி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த பிறகு, தற்போது தனுஷுடன் நடிப்பது தமக்கு மிகவும் மறக்க முடியாத தருணம் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார். ரஜினியைத் தொடர்ந்து தனுஷுடன் மம்மூட்டி திரையைப் பகிர்வது சினிமா ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· @_movietamil