மம்மூட்டியின் வரலாற்று காவியம் 'பழசிராஜா': 11-ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் ரசிகர்கள்!

மம்மூட்டியின் வரலாற்று காவியம் 'பழசிராஜா': 11-ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் ரசிகர்கள்!

மகாநடிகர் மம்மூட்டி நடிப்பில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பின்னணியில் உருவான 'பழசிராஜா' திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரசிகர்கள் இணையக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். டி.ஹரிஹரன் இயக்கத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதையில் உருவான 'பழசிராஜா' மலையாள சினிமாவின் பெருமைமிகு வரலாற்று காவியங்களில் ஒன்றாகும். வீர பழசிராஜாவாக மம்மூட்டியின் கம்பீரமான நடிப்பும், இளையராஜாவின் காலத்தால் அழியாத இசை மற்றும் சரத்குமாரின் எடச்சேன குங்கன் கதாபாத்திரமும் இன்றும் ரசிகர்களால் சிலிர்ப்புடன் பேசப்படுகிறது. இந்த வரலாற்றுத் திரைப்படத்தின் நினைவாக அக்டோபர் 15 மாலை முதல் அக்டோபர் 16 மாலை வரை சமூக வலைத்தளங்களில் சிறப்பு டேக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த இப்படைப்பின் 11வது ஆண்டு விழாவைக் கொண்டாட கேரளா மற்றும் தமிழக மம்மூட்டி ரசிகர்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.

· @kollywoodscope

பழைய செய்திகள்