‘டொரதி’ திரைப்படத்தை பாராட்டிய மம்முட்டி: கேரளாவில் 2வது வாரமாக வெற்றி நடை

‘டொரதி’ திரைப்படத்தை பாராட்டிய மம்முட்டி: கேரளாவில் 2வது வாரமாக வெற்றி நடை

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பு மற்றும் வழிகாட்டுதலில் உருவான ‘டொரதி’ திரைப்படம் கேரளாவில் இரண்டாவது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இந்நிலையில் மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டி இப்படத்தைப் பார்த்து மனதார பாராட்டியுள்ளார். ரிஷிகாந்த் இயக்கத்தில் சனந்த் உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே பல பிரபலங்கள் பாராட்டிய நிலையில், தற்போது நடிகர் மம்முட்டியும் பாராட்டுப் பட்டியலில் இணைந்திருப்பது படக்குழுவினருக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது. கதையின் தீவிரத்தன்மையும் நடிகர்களின் சிறந்த நடிப்பும் ரசிகர்களை திரையரங்கிற்கு இழுத்து வருவதால், கேரளாவில் இப்படத்தின் வெற்றி தொடர்ந்து நீடித்து வருகிறது.

· Only Kollywood

பழைய செய்திகள்