பிரமயுகம் படத்தில் மம்மூட்டி மற்றும் சித்தார்த் பரதன் நடிப்பு: திரையரங்குகளில் குவியும் பாராட்டு!

பிரமயுகம் படத்தில் மம்மூட்டி மற்றும் சித்தார்த் பரதன் நடிப்பு: திரையரங்குகளில் குவியும் பாராட்டு!

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கருப்பு வெள்ளைப் படமாக உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பிரமயுகம்' படத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி மற்றும் சித்தார்த் பரதனின் அபார நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மக்கள் தொடர்பு பிரதீஷ் சேகர் எக்ஸ் தளத்தில் இவர்களின் நடிப்பு குறித்து விரிவான பாராட்டுப் பதிவை வெளியிட்டுள்ளார். கொடுமண் போற்றி என்ற மர்மமான கதாபாத்திரத்தில் மம்மூட்டி தன் அமானுஷ்ய நடிப்பால் பார்வையாளர்களை மிரட்டியுள்ள நிலையில், அவருக்கு இணையாக சமையல்காரர் கதாபாத்திரத்தில் சித்தார்த் பரதன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் 'வேலா' திரைப்படத்திலும் முத்திரை பதித்த சித்தார்த் பரதன், இயக்குநராக மட்டுமின்றி ஒரு நடிகராகவும் ரசிகர்களிடம் பெரும் கவனம் ஈர்த்துள்ளார். பழங்கால நாட்டுப்புற கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த மிஸ்டரி ஹாரர் திரைப்படம், தமிழ்நாட்டிலும் பல முக்கிய திரையரங்குகளில் சினிமா ரசிகர்களின் பேராதரவோடு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.

· Propratheesh

பழைய செய்திகள்