20-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைக் குவித்த தெலுங்கு குறும்படம் மனஸநமஹ: சின்க் சினிமா பெருமிதம்
தீபக் ரெட்டி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி ஆஸ்கர் தகுதிப் பட்டியலுக்குத் தேர்வான பிரபல தெலுங்கு குறும்படமான 'மனஸநமஹ' (Manasanamaha), 20-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்று உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த குறும்படத்தின் ஒலி வடிவமைப்பு மற்றும் சவுண்ட் மிக்ஸிங்கை சின்க் சினிமா குழு சிறப்பாகச் செய்திருந்தது. காதல் கதையை முடிவிலிருந்து தொடங்கி பின்னோக்கி நகர்த்தும் ஒரு விசித்திரமான திரைக்கதை உத்தியுடன் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த மாறுபட்ட கதை சொல்லல் முறைக்கு ஏற்ப ஒலியமைப்பும் ரிவர்ஸ் முறையில் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது பல நடுவர்களையும் சர்வதேச திரைப்பட விழாக்களையும் வெகுவாகக் கவர்ந்தது. யூடியூபில் வெளியான இந்தக் குறும்படம் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று ரசிகர்களின் பாராட்டையும் பெற்றதுடன், இந்தியத் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் தனித்துவமான திறமையை வெளிக்காட்டியது.
· Synccinema