5-வது வாரத்திலும் வெற்றி நடை போடும் 'மந்தாடி': திரையரங்குகளில் தொடரும் ரசிகர்கள் ஆதரவு!

5-வது வாரத்திலும் வெற்றி நடை போடும் 'மந்தாடி': திரையரங்குகளில் தொடரும் ரசிகர்கள் ஆதரவு!

திரையரங்குகளில் வெளியாகி எளிய மனிதர்களின் கதையை உணர்வுபூர்வமாக பேசிய 'மந்தாடி' திரைப்படம் தற்போது வெற்றிகரமாக தனது 5-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 'மந்தாடி திருவிழா' திரையரங்குகளில் தொடர்ந்து நீடிப்பதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. மக்களின் வாழ்வியலையும் வலுவான திரைக்கதையையும் நேர்த்தியாக வெளிப்படுத்திய இந்த படம், ரசிகர்களின் வாய்வழி பாராட்டு காரணமாக பல திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வசூலுடன் காட்சிகளை தக்கவைத்து வருகிறது. பல புதிய பெரிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்த போதிலும், மந்தாடி படத்திற்கான குடும்ப ரசிகர்களின் வருகையும் ஆதரவும் சற்றும் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐந்து வாரங்களை வெற்றிகரமாக எட்டியுள்ள மந்தாடி திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்