ரசிகர்களின் அமோக ஆதரவு: மீண்டும் ஐமேக்ஸ் திரைக்கு வரும் மந்தாடி திருவிழா!

ரசிகர்களின் அமோக ஆதரவு: மீண்டும் ஐமேக்ஸ் திரைக்கு வரும் மந்தாடி திருவிழா!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மந்தாடி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ரசிகர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று சென்னை பிவிஆர் பலாஸ்ஸோ ஐமேக்ஸ் திரையில் மீண்டும் இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடல் சார்ந்த பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான மந்தாடி திரைப்படத்தின் காட்சிகளும், ஒலி அமைப்பும் பெரிய திரையில் பார்க்கும்போது தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமான ஓட்டத்தைக் கொண்டுள்ள நிலையில், பெரிய ஐமேக்ஸ் திரையில் மீண்டும் காணும் வாய்ப்பு சினிமா பிரியர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பிவிஆர் பலாஸ்ஸோ ஐமேக்ஸில் மந்தாடி திருவிழா மீண்டும் தொடர்கிறது. திரையரங்குகளில் இந்த மெகா அனுபவத்தை மீண்டும் தவறவிடாமல் காண ரசிகர்கள் இப்போதே டிக்கெட் முன்பதிவுக்கு தயாராகி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்