5வது வாரத்தில் வெற்றிகரமாக மாண்டாடி: திரையரங்குகளில் தொடரும் சாட்டப்புலி ஆட்டம்!
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வரும் 'மாண்டாடி' திரைப்படம் வெற்றிகரமாக தனது 5வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு 'தி கேம் ஆஃப் சாட்டப்புலி' என்கிற சிறப்பு வரிகளுடன் கூடிய புதிய போஸ்டரை படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் வெளியான படங்களில் மாறுபட்ட கதைக்களமும் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளும் அமைந்திருந்ததால், இளைஞர்களின் தொடர் ஆதரவோடு குடும்ப ஆடியன்ஸும் திரையரங்குகளை நோக்கி தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். புதிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆன போதிலும், 5 வாரங்கள் தொடர்ந்து வலுவான திரையரங்கு எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டிருப்பது இந்த படத்தின் அபார வெற்றியை காட்டுகிறது. பாக்ஸ் ஆபிஸில் நிலையான வசூலை ஈட்டி வரும் மாண்டாடி, திரையரங்கு ஓட்டத்திற்குப் பிறகு இன்னும் சில வாரங்களில் முன்னணி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
· @tamilcinexpress