5வது வாரத்தில் மந்தாடி திருவிழா: ஜிவி பிரகாஷின் அனல் பறக்கும் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீடு

5வது வாரத்தில் மந்தாடி திருவிழா: ஜிவி பிரகாஷின் அனல் பறக்கும் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீடு

சூரி, சத்யராஜ் மற்றும் மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள 'மந்தாடி' திரைப்படம் தற்போது வெற்றிகரமாக தனது 5வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. திரையரங்குகளில் வசூல் சாதனை புரிந்து வரும் இத்திரைப்படத்தின் பின்னணி இசையான 'Side B OST' தற்போது ரசிகர்களுக்காக அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இசை அசுரன் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான பின்னணி இசை, படத்திற்கு திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவர் அமைத்த தீவிரமான இசை ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் உருவான மந்தாடி படம் திரையரங்குகளில் தொடர்ந்து மக்களின் பேராதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் தொடர் வெற்றி கோலிவுட்டில் சூரியின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்