மீண்டும் திரையரங்குகளில் மணிரத்னத்தின் காதல் காவியம் ‘கீதாஞ்சலி’: நவம்பர் 13 அன்று ரீ-ரிலீஸ்!
இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் உருவான எவர்கிரீன் காதல் காவியமான ‘கீதாஞ்சலி’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் மனதை மயக்கும் இசை, பி.சி. ஸ்ரீராமின் கண்கவர் ஒளிப்பதிவு, நாகார்ஜுனா மற்றும் கிரிஜா ஷெட்டர் ஆகியோரின் உன்னதமான நடிப்பில் உருவான இத்திரைப்படம் பல தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எஸ்.பி. சினிமாஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக மீண்டும் பெரிய திரைக்குக் கொண்டுவருகிறது. காதல் திரைப்படங்களை திரையரங்குகளில் பெரிய திரையில் கண்டு ரசிக்க விரும்பும் இளைய தலைமுறை ரசிகர்களுக்கு இந்த மறுவெளியீடு ஒரு அரிய வாய்ப்பாக அமையும். நவீன தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஒலி அமைப்பில் வெளியாகவுள்ள இந்த காவியத்தை மீண்டும் திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் திட்டமிட்டு வருகின்றனர்.
· Ursvamsishekar