மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம்: வெளிநாட்டு விநியோக உரிமையைக் கைப்பற்றிய ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட்!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தின் வெளிநாட்டுத் திரையரங்கு விநியோக உரிமையை ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் அபாரமான கூட்டணி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலும் பாசமும் கலந்த இனிப்பான உணர்வுகளுடன் உலகெங்கும் உள்ள ரசிகர்களைச் சென்றடைய உள்ள இஞ்சி வெல்லம் திரைப்படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிட ஹோம் ஸ்கிரீன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
· Lyca Productions