மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி: 'இஞ்சி வெல்லம்' வெளியீட்டுத் தகவல்!
விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணையும் புதிய படத்திற்கு 'இஞ்சி வெல்லம்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதனை மணிரத்னம் இயக்கியுள்ளதாகவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் படம் குறித்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை 2027 ஜனவரி 29 அன்று திரையரங்குகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மணிரத்னத்தின் காட்சி அமைப்பில் இந்த புதுமையான கூட்டணி எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· @_movietamil