'வாழ' படத்தின் வெற்றிக்குப் பிறகு புதிய படம்: மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்ற 'வாழ' திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த் மேனன், தனது அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு 'ஹேப்பி லூப்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் மூத்த நடிகர் முகேஷ் மற்றும் ஜே.பி.துமினாட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான உடனேயே சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சுவாரசியமான பின்னணியில் கலகலப்பான கதையமைப்போடு இப்படம் உருவாகவுள்ளதாக இயக்குநர் ஆனந்த் மேனன் குறிப்பிட்டுள்ளார். மஞ்சு வாரியரின் புதுமையான தோற்றமும், படத்தின் டைட்டிலும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
· MalayalamReview