அண்ணா பல்கலைக்கழகத்தில் 'மரகத நாணயம்' சிறப்பு காட்சி: இரண்டாம் பாகத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு!
மாணவர்களின் எவர்கிரீன் ஃபேவரைட் படமான 'மரகத நாணயம்' சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்காக சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் சூப்பர் ஹிட் பாடலான "நீ கவிதைகளா" ஒலித்தபோது அரங்கத்தில் இருந்த ஒட்டுமொத்த மாணவர்களும் உற்சாகமாகப் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்தராஜ், முனீஷ்காந்த் நடிப்பில் உருவான முதல் பாகம் மிகப்பெரிய நகைச்சுவை வெற்றியைப் பெற்றது. தற்போது அதன் தொடர்ச்சியாக உருவாகும் 'மரகத நாணயம் 2' படத்தில் ஆதியுடன் பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட புதிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்தப் புதிய பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தை விடவும் இரண்டு மடங்கு கலகலப்பான காமெடி த்ரில்லராக இப்படம் பெரிய திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
· Actor Kayal Devaraj