ஆதி - ஏ.ஆர்.கே. சரவணன் இணையும் 'மரகத நாணயம் 2': மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கோலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற நகைச்சுவை ஃபேண்டஸி திரைப்படமான 'மரகத நாணயம்' படத்தின் இரண்டாம் பாகமான 'மரகத நாணயம் 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். நாயகனாக ஆதி நடிக்க, அவருடன் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ரானி, முனிஷ்காந்த், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள சுவாரசியமான கூறுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடனடியாக எகிற வைத்துள்ளது. முதல் பாகத்தில் அமைந்த அமானுஷ்யமும் எகனை நகைச்சுவையும் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்பதை போஸ்டர் உணர்த்துகிறது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நகைச்சுவை ஃபேண்டஸி திரைப்படம் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு மற்றும் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Only Kollywood