வெளியானது 'மரகத நாணயம் 2' ஃபர்ஸ்ட் லுக்: 2027 தொடக்கத்தில் திரையரங்குகளில் ரிலீஸ்!
ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் உருவாகும் 'மரகத நாணயம் 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆதி, ஆனந்தராஜ், முனிஷ்காந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஃபேண்டஸி காமெடி படம் 'மரகத நாணயம்'. மரகதக் கல்லைத் தேடிச் செல்லும் வேட்டையும், அதில் இடம்பெற்ற நகைச்சுவை கலாட்டாக்களும் ரசிகர்களைக் குபீரென சிரிக்க வைத்தன. தற்போது பல ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் உருவாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முந்தைய பாகத்தைப் போலவே ஒரு சுவாரசியமான மிஸ்டரி பயணத்தை உறுதி செய்கிறது. 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே படம் வெளியாகும் என்பதால் படக்குழுவின் அடுத்தடுத்த அப்டேட்டுகளைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· @_movietamil