மேரேஜ் ஸ்டோரி படத்தின் முதல் பாடல்: சரண் ராகவன் இசையில் வெளியான 'தேவதை ஓடிட்டாளா'!
சுனில் தேவ் இயக்கத்தில் புதிய தலைமுறை கலைஞர்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மேரேஜ் ஸ்டோரி'. இப்படத்தின் முதல் பாடலான 'தேவதை ஓடிட்டாளா' யூடியூப் உள்ளிட்ட தளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இசையமைப்பாளர் சரண் ராகவன் இசையமைத்துள்ள இப்பாடலை டி. சத்யபிரகாஷ் மற்றும் கானா குணா இணைந்து உற்சாகமான குரலில் பாடியுள்ளனர். பாடலாசிரியர் மோகன் வரிகளில் உருவாகியுள்ள இந்த மெலடி கலந்த துள்ளல் பாடல், இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் அட்டகாசமாக அமைந்திருக்கிறது. தி ரீல் பெட்டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.பி. சித்தார்த், ஷாஜஹான் சபானா, தீபிகா மற்றும் வத்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருமணக் களத்தில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'மேரேஜ் ஸ்டோரி' விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
· Only Kollywood