மேரேஜ் ஸ்டோரி முதல் பாடல் தேவத ஓடிட்டாளா வெளியானது

மேரேஜ் ஸ்டோரி முதல் பாடல் தேவத ஓடிட்டாளா வெளியானது

இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தின் முதல் பாடலான தேவத ஓடிட்டாளா பாடல் வெளியாகி இணையத்தில் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காதல் தோல்வியின் வலியை துள்ளலான இசை வடிவில் சொல்லும் இந்த பாடலுக்கு சரண் ராகவன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் வரிகளில் உருவான இப்பாடலை பிரபல பின்னணி பாடகர் சத்யபிரகாஷ் மற்றும் கானா குணா இணைந்து பாடியுள்ளனர். ரீல் பெட்டி தயாரிப்பில் உருவாகும் இந்த ரொமாண்டிக் காமெடி படத்தில் இளம் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள மேரேஜ் ஸ்டோரி படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்