குடும்பமும் கல்யாண கலாட்டாக்களும்: 'மேரேஜ் ஸ்டோரி' படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ்!

குடும்பமும் கல்யாண கலாட்டாக்களும்: 'மேரேஜ் ஸ்டோரி' படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ்!

ஒவ்வொரு திருமண புகைப்படத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான டிராமா ஒளிந்திருக்கும் என்ற கலகலப்பான முன்னுரையுடன் உருவாகியுள்ள 'மேரேஜ் ஸ்டோரி' திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. திருமணக் கொண்டாட்டங்களையும் உறவுகளுக்கிடையேயான நகைச்சுவை தருணங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.பி.சித்தார்த், ஷபானா ஷாஜகான், தீபிகா, வத்சன் நடராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தீபன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்து திருமணங்களில் நடக்கும் எதார்த்தமான கலாட்டாக்களைப் பேசும் படமாக இது இருக்கும் என படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டர் உணர்த்துகிறது. இந்த நவம்பர் மாதமே திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'மேரேஜ் ஸ்டோரி' திரைப்படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குடும்பத்துடன் வந்து தியேட்டர்களில் கவலை மறந்து சிரித்து மகிழும் திரைப்படமாக இது அமையும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்