திருமண வாழ்க்கையின் எதார்த்தமான பக்கங்கள்: கவனத்தை ஈர்க்கும் 'மேரேஜ் ஸ்டோரி' டீசர் வெளியீடு!

திருமண வாழ்க்கையின் எதார்த்தமான பக்கங்கள்: கவனத்தை ஈர்க்கும் 'மேரேஜ் ஸ்டோரி' டீசர் வெளியீடு!

சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மேரேஜ் ஸ்டோரி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எஸ்.பி.சித்தார்த் மற்றும் ஷபானா ஷாஜகான் இணைந்து நடித்துள்ள இந்த டீசர் இணையத்தில் வெளியாகி இளம் தம்பதியர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் முரண்பாடுகள், உரையாடல்கள் மற்றும் எதார்த்தமான வாழ்க்கைப் போராட்டங்களை நகைச்சுவையும் உணர்வும் கலந்து இப்படம் பேசுகிறது என்பதை டீசர் காட்சிகள் காட்டுகின்றன. தீபிகா, வத்சன், ஆயாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபனின் பின்னணி இசை டீசரின் உணர்வுகளுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகி வருகிறது. குடும்பங்கள் மற்றும் காதலர்கள் கொண்டாடும் விதத்தில் ஒரு கலகலப்பான படைப்பாக இது அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்